1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த படம் இந்தியன். கமல் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்..

அதில் சுதந்திர போராட்ட வீரராக கமல் நடித்திருந்த இந்தியன் தாத்தா வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. லஞ்சம், ஊழலுக்கு எதிரான கதையில் அந்த படம் உருவாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன்-2 படமும் அதேபோன்று லஞ்சம், ஊழலை மையமாக வைத்துதான் உருவாகிறது. இன்றைய காலகட்டத்தில் அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை செய்யும் ஊழலை பிரதானப்படுத்தி இந்த படம் தயாராகிறது. இதில் மாநிலம் தொடங்கி மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் செய்த ஊழல்கள் இடம்பெறுகிறது.
அதனால் முதல் பாகத்தில் நடித்த இந்தியன் தாத்தாவை விட இரண்டாம் பாகத்தில் நடிக்கும் இந்தியன் தாத்தா, சுனாமியாக பொங்கி எழுவார் என்று தெரிகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.