பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் டிசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

international indigineous day

தொல்பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்றகுறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி குறவர் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

ஐந்திணை நிலம் குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் வேடுவர் என்ற குறவர்கள் இவர்களே மூத்தபழங்குடியினர் ஆவர். உலகில் இத்தகைய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அழைப்பு பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.உலகில் முதலில் தோன்றிய மக்களே பழங்குடி குறவர்கள்.

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடிகொடிமரம்விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத்

தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும்

 கடவுள்சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும்உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும்பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள்ஆஸ்திரேலியாவட அமெரிக்காதென் அமெரிக்காஇந்தியாஜப்பான்பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடல் பழங்குடிகள்

பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

வரைவிலக்கணம்

பழங்குடிகள் என்போர், ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொருவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (bands), கால்வழி (lineages) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை.

international indigieous day