இன்று தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விரல் நுனியின் சிறு அசைவினால் எண்ணற்ற தகவல்களைப் பெற்று பெருமிதம் அடைகிறோம்.

 

international peace day

ஆனால், இந்த முன்னேற்றம் கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பலிகொண்டு அப்பாவி மக்களின் வாழ்வை அழித்தொழிக்கும் போர்களுக்கு மாற்றீடாக அமையவில்லை. போரினதும், சமாதனத்தினதும் சொல்லொனாத் துயரங்களை வீடுவீடாகக் கொண்டு செல்லும் ஒலி, ஒளி ஊடகங்களால் போரின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்ற முடியுமானால் அது உலகளாவிய கிராமத்தின் (Global Village) மிக உன்னத சாதனையாக அமையும்.

நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த காலம் முதல் சமாதானத்திற்காக பங்களிப்ப வழங்கியோருக்கும் நிறுவனங்களுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுக் கொண்டே உள்ளன.கடந்த மூன்று தசாப்த காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றோர் விபரங்கள் வருமாறு:

2008 மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari),

2007 ஆல் கோர் (Al Gore),

காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)

2006 முகமது யூனுஸ் (Muhammad Yunus),

கிராமின் வங்கி (Grameen Bank)

2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency),

மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)

2004 வங்காரி மாதாய் (Wangari Maathai)

2003 ஷிரின் எபாடி (Shirin Ebadi) 2002

ஜிம்மி கார்டர் (Jimmy Carter)

2001 ஐ.நா. (United Nations),

கோஃபி அணான் (Kofi Annan)

2000 கிம் டே-ஜுங் (Kim Dae-jung)

1999 எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ் சாண்ஸ் ஃப்ராண்டியர்ஸ் (Medecins Sans Frontières)

1998 ஜான் ஹ்யூம் (John Hume),

டேவிட் ட்ரிம்பில் (David Trimble)

1997 கன்னிவெடிகளை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)

1996 கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo),

ஜோஸ் ராமோஸ்-ஹார்தா (Jose Ramos-Horta)

1995 ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat),

அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)

1994 யாசர் அராஃபத் (Yasser Arafat),

ஷிமோன் பெரேஸ் (Shimon Peres),

இட்ஷாக் ரபின் (Yitzhak Rabin)

1993 நெல்சன் மண்டேலா (Nelson Mandela),

F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)

1992 இரிகபெர்டா மென்ஷூ டும் (Rigoberta Menchú Tum)

1991 ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)

1990 மிக்கெயில் கார்பஷெவ் (Mikhail Gorbachev)

1989 14வது தளாய் லாமா (The 14th Dalai Lama)

1988 ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)

1987 ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)

1986 எளீ வெய்செல் (Elie Wiesel)

1985 அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)

1984 டெஸ்மாண்ட் டூட்டூ (Desmond Tutu)

1983 இலெய்ச் வலெய்சா (Lech Walesa)

1982 ஆல்வா மிருதால் (Alva Myrdal),

அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso GarcÍa Robles)

1981 ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)

1980 அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Perez Esquivel)

1979 அன்னை தெரேசா (Mother Teresa)

1978 அன்வர் அல் சதாத் (Anwar al-Sadat),

மென்கெம் பெகின் (Menachem Begin)

அண்மையில் வத்திக்கான் வானொலியில் அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின விழாவுக்கு திருத்தந்தை மையக்கருத்தொன்றை வழங்கியிருந்தார். அக் கருத்தின்படி ‘அமைதியைக் காக்கவேண்டுமென்றால் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும். இதனடிப்படையிலேயே 2010 ஆம் ஆண்டில் உலக அமைதி தினம் கொண்டாடப்படும்”.

இங்கு இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும், உலக அமைதிக்கும் உள்ள தொடர்பைக் காணுமாறு திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் செயல்களும் இயற்கையைப் பயன்படுத்தும் முறையும் வெப்பமாற்றமும் மக்கள் தொகையும் தொடர்புடையவை எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். இந்த சவால்களை நீதியின் அடிப்படையில், சமூகச் சமத்துவக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு நலம் பயக்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார். சுற்றுப்புரத்தைப் பாதுகாப்பது அவசரத்தேவை எனத் திருத்தந்தை கூறுகிறார். அதுவே அமைதிக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ஆலோசணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உயரிய கருத்தாகும்.