விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படம் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் யுகத்தில் எப்படியெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது இந்த இரும்புத்திரை. அறிமுக இயக்குநர் பிஎஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். வில்லனாக அர்ஜூன் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்தில் ஆதாருக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இரும்புத்திரை படத்திற்கு பா.ஜ.வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் ஆதார் காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை காசி தியேட்டரில் சிலர் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கு காலை மற்றும் மதியம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை, சத்யம் தியேட்டர் எதிரிலும் இரும்புத்திரை படத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது.
விஜய்யின் மெர்சல் படத்தை பா.ஜ.,வினர் எதிர்த்ததால் சுமாராக போக வேண்டிய படம் சூப்பர் வெற்றி பெற்றது. இப்போது அதேபோன்றதொரு சூழல் இரும்புத்திரைக்கு உருவாகி வருவதாக பலர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.



Leave A Comment
You must be logged in to post a comment.