திருமணம், குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு சில ஆண்டுகள் ஓய்வு கொடுத்திருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரியானார்.
கதாநாயகியை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் வரவேற்பை பெறவே, தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார் படங்களில் நடித்தார்.
தற்போது, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் மற்றும் ராதா மோகனின் காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன. இந்நிலையில் ஜோதிகாவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தீரன், அருவி போன்ற படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராஜ் என்பவர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.