சில வருடங்களுக்கு முன் தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் தற்போது ‘மிர்ச்சி’ சிவா, ஐஸ்வர்யா மேனன் ஆகியோரை வைத்து ‘தமிழ்ப்படம்-2 படத்தை இயக்கியுள்ளார். வித்தியாசமான விளம்பரங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

 

இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. பல படங்களை கலாய்த்து அந்த டிரைலர் உருவாக்கப்பட்டிருந்தது.’தமிழ்ப்படம்-2 படத்தை இந்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ‘ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது. அந்த பயங்கரமான விஷயத்துக்கு காத்திருங்கள்’ என்று இயக்குனர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.சி.எஸ்.அமுதன் குறிப்பிட்டுள்ள ஜூலை-13 என்பது வேறு ஒன்றும் இல்லை, ‘தமிழ்ப்படம்-2’ படத்தின் ரிலீஸ் தேதிதான். ‘தமிழ்ப்படம்-2’ தொடர்பான தகவல்கள் எல்லாவற்றையும் வித்தியாசமாக அறிவித்து வரும் இயக்குநர், ‘தமிழ்ப்படம்-2’ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பையும் இப்படி வெளியிட்டிருக்கிறார்.