ஜூன் 22ல் பிறந்த நாள்: ரசிகர்களுக்கு விஜய் முக்கிய வேண்டுகோள்
ஒவ்வொரு ஆண்டும் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியன்று, அவரது ரசிகர்கள் சிறப்பான வகையில் கொண்டாடி வருவது தெரிந்ததே. மேலும் அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது டீசர், டிரைலர் ஏதாவது வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடே ஸ்தம்பித்து போய் இருப்பதால் விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து விஜய் தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் வந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தனது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து தொலைபேசி வாயிலாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தலால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக கஷ்டப்பட்ட ரசிகர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் விஜய் பணம் டெபாசிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்து முடித்திருக்கும் ’மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி புதிய போஸ்டர் ஒன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.