பல சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி வெளிவந்த கமலின் விஸ்வரூபம், படம் விஸ்வரூப வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது.

கமலே இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். கமலுடன் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் வருகிற ஜூன் 11-ம் தேதி, மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தின் தமிழ் டிரைலரை கமலின் மகள் ஸ்ருதிஹாசனும், தெலுங்கு டிரைலரை நடிகர் ஜூனியர் என்டிஆரும், ஹிந்தி டிரைலரை நடிகர் அமீர்கானும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.