டயனோசர்களை வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின்னர் டயனோசர்களை வைத்து பல படங்கள் வெளிவந்தன.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூராசிக் வேர்ல்டு படம் வந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது ஜுராசிக் வேர்ல்டு – பாலென் கிங்டம் என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பில் ஜே.எ.பயானோ இயக்கி உள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது, இப்படத்தின் இரண்டாவது மற்றும் கடைசி டிரைலர் வெளியாகி உள்ளது. 2.30 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரை வெளியான 24 மணிநேரத்தில் 65 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 1.2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
இப்படம் 2018 ஜுன் மாதம் 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.