ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 2.0 படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அப்படியும் திட்டமிட்டபடி வேலைகள் முடியவில்லை.

பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுவதாக அறிவிக்கப்பட்டு பிறகு தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 14 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்தனர். லேட்டஸ்ட் தகவல்… ஏப்ரல் மாதத்துக்குள் 2.0 படத்தின் வேலைகள் முடிய வாய்ப்பில்லையாம். எனவே ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தை ஏப்ரல் 14 அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.
‘காலா’ பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளன. காலா படத்தை லைகாவே வாங்கி இருப்பதால் 2.0 தேதியில் காலா படத்தை வெளியிடும் பணியை ஆரம்பித்துள்ளனர். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகவிருக்கின்றன.



Leave A Comment
You must be logged in to post a comment.