நடிகர் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷுக்கு, ஏற்கனவே படம் எடுத்ததில் கடன் ஏற்பட்டு, அவர் அதில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அதில் இருந்து மீள்வதற்காக, அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் கொடுத்த யோசனைபடியே, ரஜினியை வைத்து, காலா படம் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்துக்காக, நடிகர் ரஜினி சம்பளம் எதுவும் பேசி வாங்கிக் கொள்ளவில்லை. ஆனாலும், படம் ரிலீசாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காலா படம் முழுக்க முழுக்க நடிகர் தனுஷ் முயற்சியிலும், யோசனையிலும் எடுக்கப்பட்டதால், படத்தின் முடிவால் தனுஷ் மீது நடிகர் ரஜினி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காலா படம் சரியாகப் போகாதது, தன்னுடைய அரசியல் முயற்சிகளுக்கு சற்று பலவீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக ரஜினி வருத்தப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.



Leave A Comment
You must be logged in to post a comment.