கார்த்தி நடித்த காஷ்மோரா படு தோல்வியடைந்தது. அதன் பிறகு நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வசூல் ரீதியில் வெற்றியடைந்தது. கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படமும் வசூல் ரீதியில் வெற்றியடைந்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் சம்பளம் 2 கோடி. சாயிஷாவுக்கு 60 லட்சம் சம்பளம், சத்யராஜ் சம்பளம் 1 கோடி, சூரி சம்பளம் 25 லட்சம் என இந்தப் படத்தின் பட்ஜெட் 16 கோடி. (கார்த்தியின் சம்பளம் இல்லாமல்) 75 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.
தெலுங்கு ரைட்ஸ் 6 கோடி, ஹிந்தி ரைட்ஸ் 7 கோடி, டிஜிட்டல் ரைட்ஸ் – 3 கோடி என இந்த 3 பிசினசிலேயே போட்ட முதலீடு 16 கோடியை திரும்ப எடுத்துவிட்டனர்.
சாட்டிலைட் – 5 கோடி, கேரளா, கர்நாடகா – 1 கோடி விற்கப்பட்டநிலையில், 3 கோடிக்கு பிரிண்ட் அண்ட் பப்ளிசிட் பண்ணி 310 தியேட்டரில் ரிலீஸ் கடைக்குட்டி சிங்கம் படத்தை வெளியிட்டனர். இதுவரை தமிழ்நாடு ஷேர் மட்டுமே 15 கோடி கிடைத்துள்ளது.
இந்த படம் பி அன்ட் சி யில் தமிழ்ப்படம் 2 வை விட மிகப் பெரிய வெற்றியடைந்து இரண்டாவது வாரத்திலும் 250க்கு மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது வாரத்தில் பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் அதிகரித்து வருகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.