பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், சூரி, ஸ்ரீமன் என பெரும் நட்சத்திரக்கூட்டமே நடிக்கும் இப்படத்திற்கு நேற்றுமுன் தினமே சென்சாரில் ‘U’ சர்டிபிகேட் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சர்டிபிகேட் வழங்கப்படவில்லை.

 

என்ன காரணம்? படத்தில் நிறைய காளைமாடுகள் பயன்படுத்தப்பட்டதால் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பீட்டா அமைப்பு குடைச்சல் கொடுத்ததோடு, சென்சார் சர்ட்டிபிகேட் வழங்க எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

பீட்டாவின் எதிர்ப்பு காரணமாக விலங்குகள் நலவாரியம் தன் பங்குக்கு நோ அப்ஜெக்ஷ்ன் சர்ட்டிபிகேட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறது. அதனால் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் சிக்கல் நீடித்தது. ஒருவழியாக பிரச்சனைகள் தீர்ந்த பிறகே ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை வருகிற 13-ம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தாமதம் காரணமாக கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு கிடைக்க வேண்டிய சுமார் 75 தியேட்டர்கள் தமிழ்ப்படம்-2 படத்துக்குப்போய்விட்டன.