நடிகர் ரஜினிகாந்த், தனது மருமகன் தனுஷ் தயாரிப்பில் நடித்துள்ள படம் காலா. கபாலிக்கு பிறகு ரஞ்சித் மீண்டும் ரஜினியை இயக்கி உள்ளார். ரஜினியுடன் சமுத்திரகனி, நானாபடேகர், அருள்தாஸ், ஹூயூமா குரேஷி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காலா படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது. நாளை மறுதினம்(மே 9) சென்னை ஒய்எம்சிஏ., மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது. காலா படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இசை வெளியீட்டுக்கு முன்பாக காலா பிரிவியூவ் ஆல்பத்தை தனுஷ் வெளியிட்டுள்ளார். இதில் எந்தமாதிரியான பாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த பாடல்கள் எப்படி உருவானது என்பது பற்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், இயக்குநர் ரஞ்சித்தும் விவரித்துள்ளனர்.
ஏற்கனவே காலாவிலிருந்து செம்ம வெயிட் என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Leave A Comment
You must be logged in to post a comment.