கபாலி படத்திற்கு பிறகு ரஜினி – ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்த படம் காலா. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்தார்.

மும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பின்னணியில் காலா படம் உருவாகி உள்ளது. ரஜினியுடன் மாஜி ஹீரோயின் ஈஸ்வரி ராவ், ஹிந்தி நடிகை ஹூயூமா குரேஷி, ஹிந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரகனி, அருள்தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி, ஏப்., 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் நிலவி வந்த ஸ்டிரைக் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகி உள்ளது.
காலா படம் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகும் என தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.



Leave A Comment
You must be logged in to post a comment.