மாஸ்டருக்கு பிறகு உலக நாயகனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றது.
படம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளனர். தியேட்டர் திறக்கப்பட்டு நிலைமை சீரானதும் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவின.
மேலும் நேற்று தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தனது அடுத்த படத்தின் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் வருகிற 2021 ஆம் ஆண்டு சம்மரில் வெளியாகிறதாம். அந்த போஸ்டரில் ‘விஸ்வரூபம்’ பட பாடலில் இருந்து எவனென்று நினைத்தாய் என்று ஹேஷ்டேக் குறிப்பிட்டுள்ளார். அதனால் அதுவே படத்தின் டைட்டிலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave A Comment
You must be logged in to post a comment.