யுவன் சங்கர் ராஜாவின் ‘YSR FILMS’ நிறுவனமும், கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இணைந்து நடித்துள்ள படம் ‘பியார் பிரேமா காதல்’.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுகின்றன. இப்படம் கடந்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கு ‘U/A’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.
சென்சார் சர்ட்டிபிகேட் கிடைத்ததும், படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டார்கள். ‘பியார் பிரேமா காதல்’ படத்தை ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்-2’, திரைப்படம் ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது. இதனால் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’வும், யுவன் சங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள’ பியார் பிரேமா காதல்’ படமும் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2′ படத்தை திரையிடவே தியேட்டர்காரர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதால் பியார் பிரேமா காதல்’ படத்துக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.