புதியவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை ரோலில் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குடும்ப சூழல் கருதி போதை பொருள் கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கிறார். லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார்.

பாடல்கள், டிரைலர் எல்லாம் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தான் கமலின் விஸ்வரூபம் 2-வும் ரிலீஸாகிறது. இதன்மூலம் கமலுடன் நேரடியாக மோத தயராகிவிட்டார் நயன்தாரா.