தற்போது சினிமா ஸ்டிரைக் நடந்து வருகிறது. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. என்றாலும் தியேட்டர் உரிமையாளர் சங்கங்களில் ஒரு பிரிவினர் தியேட்டர்களை திறந்துள்ளனர்.

அவற்றுக்கு சரியான புதிய படங்கள் இல்லாததால் பழைய படங்களை திரையிட்டு வருகிறார்கள். இதை பயன்படுத்தி கொண்டு சமீபத்தில் வெளியாகி சரியான தியேட்டர் கிடைக்காத படங்கள், மக்களிடம் வரவேற்பை பெற்ற பிறகு தியேட்டரை விட்டு வெளியேற்றப்பட்ட படங்கள் மீண்டும் திரைக்கு வருகிறது.
அந்த வரிசையில் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது கத்துக்குட்டி படம். இந்தப் படத்தை பத்திரிகையாளர் சரவணன் இயக்கி இருந்தார். தஞ்சை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மீத்தேன் வாயு எடுப்பதை எதிர்த்து போராடும் இளைஞனின் கதைதான் படம். முழு படமும் தஞ்சை மாவட்டத்திலேயே படமாக்கப்பட்டிருந்தது. நரேன், சிருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞானவேல், காதல் சந்தியா, காதல் சரவணன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார், அருள்தேவ் இசை அமைத்திருந்தார்.



Leave A Comment
You must be logged in to post a comment.