மகாநதி படத்திற்கு பிறகு தெலுங்கில் சில படவாய்ப்புகள் தேடி வந்தபோதும், எந்த படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை கீர்த்தி சுரேஷ். தமிழில் சர்கார், சாமி-2, சண்டக்கோழி-2 என பிசியாக நடித்து வருவதாக சொல்லி தேடி வந்த தெலுங்குப்பட வாய்ப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகாமல் இருப்பதற்கு காரணம், ராஜமவுலி இயக்கும் புதிய படம் தான் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.

அதாவது, ஜூனியர் என்டிஆர், ராம் சரணை வைத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் கீர்த்தி சுரேசும் ஒரு லீடு ரோலில் நடிக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.