தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோயின் நயன்தாரா. கதையின் நாயகியாக நடிக்க தொடங்கியதில் இருந்து அவருடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் தனது ரோல் வலுவாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

அரைடஜன் படங்களுடன் வலம் வரும் நயன்தாரா நடிப்பில் தற்போது கோலமாவு கோகிலா என்ற படம் தயாராகி வருகிறது. நயன்தாராவுடன், சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் சிங்கிள் டிராக் வருகிற 8-ம் தேதி ரிலீஸாகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.