நயன்தாராவின் அடுத்த வித்தியாசமான படமாக வெளியாக இருக்கிறது கோலமாவு கோகிலா. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் நயன்தாரா தான் முதன்மையானவர். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக யோகி பாபு, நயன்தாராவை ஒருதலையாய் காதலிக்கும் “கல்யாண வயசு” பாடல், யூ-டியூப்பில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று(ஜூலை 5) வெளியிடப்பட்டன. மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக உள்ளன.
டிரைலரில் நயன்தாரா போதை பொருள் கடத்தும் பெண்ணாக நடித்திருக்கிறார். அவருக்கு துணையாக சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிரைலர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான ஒரு மணிநேரத்தில் 1.39 லட்சம் பார்வைகள் கிடைத்தன.



Leave A Comment
You must be logged in to post a comment.