அறம் படத்திற்கு பிறகு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் போதை பொருள் விற்கும் பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இந்த செய்தி வெளியிடப்பட்டதில் இருந்தே கோலமாவு கோகிலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது.

மேலும், தமிழைப் போலவே தெலுங்கிலும் நயன்தாராவின் மார்க்கெட் சீராக இருப்பதால் இந்த படத்தை தமிழில் வெளியாகும் ஆகஸ்ட் 17-ந்தேதி தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். மேலும், கோலமாவு கோகிலா படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு கோ கோ கோகிலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.