மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஸ்ரீகணேஷ். இவர், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப்படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்றாலும், ஓரளவுக்கு பேசப்பட்ட படமாக அமைந்தது. அதனால் இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கு கவன ஈர்ப்பும் கிடைத்தது.

8 தோட்டாக்கள் படத்தைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்குகிறார் ஸ்ரீ கணேஷ். ராக்போர்ட் என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தான் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமையை தானே வாங்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் யுவன்.
அதன்படி ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் இசை உரிமையையும், தன்னுடைய ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்துக்காக யுவனே வாங்கியுள்ளார்.
‘குருதி ஆட்டம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து பாடல்களையும் முன்கூட்டியே கேட்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அதற்கு யுவன் சங்கர் ராஜாவும் சம்மதம் சொல்லி இருக்கிறார்.



Leave A Comment
You must be logged in to post a comment.