இந்தியாவின் இசை குயில் லதா மங்கேஷ்கருக்கு இன்று(செப்., 28) 89-வது பிறந்த நாள். அவரை பற்றிய பத்து முத்துக்கள்.

 

1. 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் மகளாக ஒரு “கோமன்டக் மராட்டிய” குடும்பத்தில் பிறந்தார்.

2. தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார். பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.

3. 1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். “மஜ்பூர்” என்ற படம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது .

4. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி.பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகிக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.

5. 1961-ல் பஜனை பாடல்கள் அடங்கிய “அல்லாஹ் தேரா நாம்” மற்றும் “பிரபு தேரா நாம்” என்ற இரண்டு ஆல்பத்தை வெளியிட்டார். 1974ல் ‘மீராபாய்” பஜன்ஸ்’, ‘சான்வரே ரங் ராச்சி’, மற்றும் ‘உத் ஜா ரெ காக’, 2007ல் “சாத்கி” என்ற ஆல்பத்தையும், 2012 ஆம் ஆண்டு அவருடைய சொந்த பெயரில் (எல்.எம்) ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.

6 .பல தமிழ் திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

7. “வாடல்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பிறகு, அதே ஆண்டு சி.ராமச்சந்திராவுன் இணைந்து ‘ஜஹாஞ்ச்கார்’, ‘காஞ்சன்’ (1955) மற்றும் ‘லேகின்’ (1990) என்ற இந்தித் திரைப்படத்தையும் தயாரித்தார்.

8. 1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

9. மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.

10. இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்தனா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். உயிருடன் இருக்கும்போதே பாரத ரத்னா விருது பெற்ற மிகச் சிலரில் லதா மங்கேஷ்கரும் ஒருவர்.