மங்காத்தா 2 பற்றி வந்த சூப்பர் தகவல்- ஆனால் வெங்கட் பிரபுவின் ரியாக்ஷன்

மங்காத்தா அஜித்தின் சினிமா பயணத்தில் வேறொரு மாற்றத்தை உருவாக்கிய படம். இப்படி ஒரு படத்தில் எப்படி தைரியமாக நடித்தார் என முதலில் ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.

ஏன் பிரபலங்களே நெகட்டீவ் வேடத்தில் அதுவும் தனது 50வது படத்தில் எப்படி நடித்தார் என யோசித்தார்கள். அஜித் எவ்வளவு தைரியமாக படத்தில் நடிக்க ஆரம்பித்தாரோ அதேபோல் படமும் வெற்றி கண்டது.

இப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகத்தில் அஜித் எப்போது நடிப்பார் என கேள்வி அதிகம் எழும்புகிறது. ஆனால் அஜித் பக்கத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் கிடையாது.

வெங்கட் பிரபு மட்டும் அஜித் ஓகே சொன்னால் இப்போதே இரண்டாம் பாகம் 2 தயார் என்று கூறி வருகிறார். அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் மங்காத்தா 2 படப்பிடிப்பு விரைவில் என தகவல் வந்தது, அதைப்பார்த்த வெங்கட் பிரபு முழிப்பது போல் ஸ்மைலி போட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு,

Venkat Prabu Mankatha2 images