விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் இணைந்து நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை.’ இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையில், ‘இரும்புத்திரை’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை ஷிபு தமீனின் ‘தமீன் பிலிம்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் இவர்.
இப்போது ஹரி, இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி-2’ படத்தை தயாரித்து வருகிறார். விஷாலின் ‘இரும்புத்திரை’யை கேரளாவில் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஷிபு தமீன்!
ஆனால் ‘இரும்புத்திரை’ ரிலீஸ் தேதி குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் மார்ச் 29 தேதியை மனதில் கொண்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.



Leave A Comment
You must be logged in to post a comment.