மாளவிகா மோகனனை அடுத்து ‘தனுஷ் 43’ படத்தில் இணைந்த ‘மாஸ்டர்’ நடிகர்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் படமான ’தி க்ரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது தனுஷின் 43 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தில் நடிகர் மகேந்திரன் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளது. நடிகர் மகேந்திரன் ஏற்கனவே தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன், மகேந்திரன் ஆகிய இருவரும் தனுஷின் அடுத்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment
You must be logged in to post a comment.