விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. டெல்லி, கர்நாடகா, சென்னையை தொடர்ந்து திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடக்கிறது.
அங்கு விஜய்-விஜய் சேதுபதி இடம்பெறும் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம். அதுதான் படத்தின் ஹைலைட் என்று கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் புரொமோஷன் வேலைகள் தொடங்கிவிட்டது. அதாவது சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கம் முன் மாஸ்டர் பட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Comment
You must be logged in to post a comment.