சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது. சில மாதங்களாக அங்கு செட் போடும் பணிகள் நடை பெற்றது.

 

ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும் நேரத்தில் தமிழ்த்திரையுலகில் ஸ்டிரைக் நடந்ததால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். தற்போது ஸ்டிரைக் முடிவடைந்து விட்டதையடுத்து, மே மாதம் 4-ந்தேதி முதல் அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பிலேயே அஜித் – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறாராம் சிவா.