கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ள மவுனப் படம் கடந்த வாரம் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் வெளியானது. தமிழ்நாட்டில் திரையுலகத்தினரின் ஸ்டிரைக் இருப்பதால் இங்கு படம் வெளியாகவில்லை. முதலில் தடையைத் தாண்டி படத்தை வெளியிடுவேன் என கார்த்திக் சுப்புராஜ் அறிவித்தார்.

அவரது முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். பின்னர், அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி படத்தை வெளியிடக் கூடாது என சொல்லி தயாரிப்பாளர் சங்கம் அனுப்பி வைத்துள்ளது. அவரும் ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தருகிறேன், படத்தை வெளியிடவில்லை என்றார்.
ஆனால், மவுனப் படம் என்பதால், அந்தப் படத்தை தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில், பிற நாடுகளில் வெளியிட்டார். படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பில்லை. இப்போது படத்தின் பைரசியும் இணையதளங்களில் வந்துவிட்டது என்கிறார்கள். ஏற்கெனவே, அவரும், படத்தின் நாயகனும் படத்தை திருட்டுத்தனமாகப் பார்க்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார்கள்.
மொழி இல்லாத படத்தை ஹிந்தியில் வெளியிடுகிறேன், தெலுங்கில் வெளியிடுகிறேன் என அவசரப்பட்டு வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ் தற்போது பைரசி வந்துவிட்டதால் தவிக்கிறார். தமிழ்நாட்டில் பிரச்சினை தீர்ந்த பின் படத்தை வெளியிட நினைத்தால் யார் வாங்க முன் வருவார்கள் என்பது தெரியவில்லை.



Leave A Comment
You must be logged in to post a comment.