லண்டன் : பிரிட்டன் திரைப்பட விழாவில்,மெர்சல் படத்திற்கு, சிறந்த படத்திற்கான விருது கிடைத்து உள்ளது.

பிரிட்டனில் நடந்த, நான்காவது தேசிய திரைப்பட விழாவில், 2018ம் ஆண்டுக்கான விருதுகள்,நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில், விஜய் நடித்துள்ள, மெர்சல் படத்திற்கு,சிறந்த படத்திற்கான விருது கிடைத்து உள்ளது.
இப்பிரிவில், பிரான்ஸ், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சிலி உள் ளிட்ட நாடுகளின் படங்கள் இடம் பெற்றிருந்தன. மெர்சல் படத்தை,தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, அட்லீ இயக்கி இருந்தார்.



Leave A Comment
You must be logged in to post a comment.