ரஜினி நடிப்பில் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான படம் காலா. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

படத்திற்கான முன்பதிவு ரஜினி படங்களின் வரலாற்றில் சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் காலா படம் முதல்நாளில் ரூ.50 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இது கபாலி படத்தின் வசூலை விட குறைவு தான் என்கிறார்கள்.

அதேசமயம், விஜய்யின் மெர்சல் பட சாதனையை காலா முறியடித்திருக்கிறது. மெர்சல் படம் சென்னையில் முதல்நாளில் ரூ.1.52 கோடி வசூலித்தது. காலா, சென்னையில் முதல்நாளில் ரூ.1.76 கோடி வசூலித்திருக்கிறது.