சமீபத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக தெலுங்கில் மகாநதி என்கிற படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.. சாவித்திரியை, அவரது நினைவுகளை, அந்த வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீட்டுக்கொண்டு வந்துவிட்டார் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

இன்று முதியோர் இல்லங்களில் இருக்கும் வயதான பெண்கள் பலரும் சாவித்திரியின் ரசிகைகளாக, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவர் நடித்த தங்களை பார்த்து ரசித்தவர்கள் தான். அதனால் அவர்களுக்கு இந்த ‘மகாநதி’ படத்தை சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்ட படத்தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது.
வரும் ஜூன் மூன்றாம் வாரத்தில் இருந்து, முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் இந்தப்படத்தை பார்க்கும் விதமாக திரையிட்டு காட்டப்படும் என்று சொல்லப்படுகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.