‘சைக்கோ’ பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார். அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார்.

அதையடுத்து, சிம்புவிடம் ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதைக்களத்தில் ஈர்க்கப்பட்ட சிம்பு, மிஷ்கினுடன் இப்படத்தில் பணியாற்ற விருப்பப்படுவதாகவும், அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைபடத்தில் நடித்து வருவதால், அதன் படப்பிடிப்பு முடித்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய முக்கிய தகவல் என்னவென்றார், இந்த சிம்பு-மிஷ்கின் கூட்டணி திரைப்படத்தில் ‘வைகைப் புயல்’ வடிவேலு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

’24-ஆம் புலிகேசி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சங்கர், வடிவேலு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு புகார் அளித்திருந்தார். படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதில் செட் போடப்பட்ட செலவும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் அவரை அழைத்தபோது வடிவேலு வரவில்லை, பின்னர் அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிம்புவுடனான தனது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக வாடிவேலுவை ஒப்பாந்தம் செய்ய மைஸ்கின் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஹரி இயக்கிய் ‘கோவில்’ படத்தில் சிம்பு-வடிவேலு கூட்டணி சிறப்பாக அமைந்திருந்தது. மேலும், நடிகர் வடிவேலு கடைசியாக 2017-ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.