சமுத்திரக்கனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார் அமலாபால். ஒரே நேரத்தில் தெலுங்கில் நானியை ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் தெலுங்குப்பதிப்பான ‘ஜண்டாபாய் கபிராஜூ’ படத்திலும் அமலாபாலே கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின் அமலாபால் இரட்டை வேடங்களில் நடிக்க ‘கிட்ணா’ என்கிற படத்தை சமுத்திரகனி இயக்குகிறார் என அறிவிப்பு வெளியாகி அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இந்தநிலையில் மீண்டும் சமுத்திரகனி இயக்கும் படத்தில் நானி, அமலாபால் இருவரும் நடிக்க இருக்கிறர்களாம். இவர்களுடன் சரத்குமார், நாசர், பார்வதி நாயர் ஆகியோரும் நடிக்க உள்ளர்களாம். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறாராம்.



Leave A Comment
You must be logged in to post a comment.