நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிற படம் கோலமாவு கோகிலா. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகிறது.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நயன்தாரா குடும்பத்துக்கு ஒரு தீடீர் சிக்கல். அதை சரி செய்ய நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் போதை பொருள் விற்கிறார். தினமும் வேலைக்கு, அல்லது கல்லூரிக்கு செல்லும் பெண்கள் போல உடை அணிந்து, முதுகில் பேக்கை மாட்டிக் கொண்டு போதை பொருள் விற்கச் சென்று விட்டு பத்திரமாக வீடு திரும்புவார்.
போதை பொருளை கோலமாவு என்று சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பிடுவார்கள். அதை விற்கும் கோகிலாவான நயன்தாரா கோலமாவு கோகிலா ஆகிறார். போதை பொருள் விற்கும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினையை காமெடி மற்றும் செண்டிமெண்ட் கலந்து தருகிறார்கள்.
படத்தில் நயன்தாராவுக்கு ஜோடி கிடையாது. ஆனால் நயன்தாரா வீடு இருக்கும் பகுதியில் கடை நடத்தும் யோகிபாபு, நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கிறார். அவர் நயன்தாராவை நினைத்து உருகி ஒரு பாடலும் பாடுகிறார்.
“எனக்கு இப்போ கல்யாண வயசு வந்திடுச்சிடி டேட் பண்ணவா இல்ல சாட் பண்ணவா, சேர்ந்து வாழ ஆசை வந்திருச்சு மீட் பண்ணவா இல்ல வெயிட் பண்ணவா” என்று அந்த பாடல் தொடங்கும், இதனை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார்.



Leave A Comment
You must be logged in to post a comment.