நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் திலீப் சுப்பராயன் மாஸ்டர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அப்பா மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித்.
இப்போது அஜித்தை வைத்து அப்பா கதாபாத்திரம் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். திலீப் சுப்பராயன் படமாக்கிவருவதுகூட அப்பா கெட்டப்பில் அஜித் மோதும் சண்டைக்காட்சியைத்தான்.
இந்த சண்டை காட்சி அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும்வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விஸ்வாசம் யூனிட்டை சேர்ந்தவர்கள். ராமோஜிராவ் ஸ்டுடியயோவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அஜித் சென்னை வந்திருந்தார்.
இறுதி அஞ்சலி செலுத்தியதும் ஐதராபாத் பயணமான அஜித் இப்போது ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்!



Leave A Comment
You must be logged in to post a comment.