தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் ரகுல் ப்ரீத் சிங். கிளாமருடன் துறுதுறுப்பான நடிப்பையும் கொடுத்ததால் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால், கடந்த சில படங்களாக தெலுங்கில் அவருக்கு தோல்விப் படங்களே அதிகம் அமைந்ததால் அவரை அங்கு யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஹிந்தியில் ரகுல் நாயகியாக நடித்த ‘அய்யாரி’ படம் கடந்த வாரம் வெளியாகி தோல்வியைத் தழுவியது. தெலுங்கும் கைவிட்டதால், ஹிந்தியிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தமிழ்ப் பக்கம் மொத்தமாகத் தாவி வர திட்டமிட்டுள்ளார் ரகுல்.
சில வருடங்களுக்கு முன்பு தமிழில் அறிமுகமான அவருக்கு அடுத்தடுத்து தோல்விப் படங்களே அமைந்தது. ஆனால், அந்த ராசியை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மாற்றியது. இப்போது சூர்யாவுடன் செல்வராகவன் இயக்கும் படத்திலும், கார்த்தி அடுத்து நடிக்க உள்ள படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரவிகுமார் இயக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல்.
சில வருடங்களுக்கு முன்பு கைவிட்ட தமிழ்த் திரையுலகம், ரகுலுக்கு தக்க சமயத்தில் கை கொடுத்து தூக்கிவிட்டுள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.