பொன்ராமின், சீமராஜா படத்தை முடித்த பிறகு, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் பிக்ஷ்ன் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது ஹைலைட்.

தற்போது ஸ்டிரைக் நடப்பதால் படப்பிடிப்பு வேலைகள் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீரன் படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகி உள்ளார் ரகுல்.
மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும், கலை இயக்குநராக முத்துராஜூம் பணியாற்ற உள்ளனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.



Leave A Comment
You must be logged in to post a comment.