காலா படத்தை அடுத்து ரஜினி நடித்து வரும்165 வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். காலா படம் வெளியான ஜூன் 7-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

மேலும், ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கும் இந்த படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடிக்கிறார். இப்படம் மதுரையை களமாக கொண்ட கதையில் உருவாகி வருகிறது. அதனால், இரண்டாம்கட்ட படப்பிடிப்பை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், அடுத்தபடியாக மதுரையில் முகாமிடுகிறாராம்.