போனிகபூர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

‘நேர் கொண்ட பார்வை’ வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி திங்கட்கிழமை பக்ரித் மற்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறைகள் வருவதால் மீண்டும் ஒரு நீண்ட விடுமுறை தினத்தில் அஜித் படம் ரிலீஸ் ஆகிறது. எனவே ‘விஸ்வாசம்’ படத்திற்கு இணையான ஓப்பனிங் வசூலை இந்த படமும் பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
Leave A Comment
You must be logged in to post a comment.