பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, கார்த்தி நடித்து வரும் தேவ் என்ற புதிய படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

மேலும், ரஜத் ரவிசங்கர் இயக்கும் இந்த படத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தியுடன் இணைந்துள்ளார் ரகுல் பிரீத் சிங். காதல் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையைத் தொடர்ந்து உக்ரைன், அமெரிக்கா நாடுகளில் நடைபெற உள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் தேவ் படம் டிசம்பர் கடைசி வாரம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.