திருமணத்திற்கு பிறகும் வெற்றிப்பட நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இன்றைய தினம் அவரது நடிப்பில் சீமராஜா, யுடர்ன் என்ற இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன.

தனது எதிர்கால சினிமா திட்டம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சமந்தா. அதில், இனிமேல் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களுக்குமே நானே டப்பிங் பேசுவேன். இது எனது நடிப்புக்கு இன்னும் பலம் சேர்ப்பது போன்று உணர்கிறேன்.

எதிர்காலத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் திட்டமும் உள்ளது. அன்னபூர்ணா ஸ்டுடியோவின் உதவியுடன் எனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி செயல்படுத்தப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.