‘சீமராஜா’, ‘யு-டர்ன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் சமந்தா இப்போது நடித்து வருகிறார். விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி ‘சீமராஜா’ வெளியாகிறது. இந்த படத்திற்காக சிலம்பம் கற்றார் சமந்தா என்ற தகவல் சீமராஜா படப்பிடிப்பு துவங்கியபோது வெளியானது.

இப்போது இந்த படத்தில் சமந்தா ஏற்றுள்ள கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சீமராஜா படத்தில் சிலம்பம் கற்றுக் கொடுப்பவராக சமந்தா நடித்திருக்கிறார். அவரது கேரக்டர் பெயர் சுதந்திராதேவி.
சமீபத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தில் டாக்டர் ரதி தேவியாக நடித்தார் சமந்தா. ‘நடிகையர் திலகம்’ படத்தில் மதுரவாணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்!
படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர்கள் வித்தியாசமாக இருக்கிறரோ இல்லையோ… அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கின்றன.
ரதி தேவி, மதுரவாணி, சுந்தந்திரா தேவி வரிசையில் ‘யு-டர்ன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களிலும் சமந்தாவின் கேரக்டர்களுக்கு வித்தியாசமான பெயர்களை எதிர்பார்க்கலாம்.



Leave A Comment
You must be logged in to post a comment.