ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம்- ‘சர்கார்’. கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இயக்கி வரும் இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

 

‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

சென்னை, கோல்கட்டா, லாஸ்வேகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இருதினங்களுக்கு முன் அதாவது, செப்டம்பர் 2 அன்று படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற கடைசிநாள் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார். அன்றைய தினம் விஜய் கலந்து கொள்ளவில்லை.

சர்கார் படத்தில் முதலமைச்சராக நடிக்கும் பழ.கருப்பையாவின் மகளாக நடிக்கிறார் வரலட்சுமி. துணை முதல்வரான ராதாரவி, விபத்தை ஏற்படுத்தி பழ.கருப்பையாவை கொலை செய்கிறார். தன் தந்தையின் மரணத்துக்குப் பின்னால் உள்ள மர்மத்தைத் தேடி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி.

அவருக்கு ஆதரவாக விஜய்யும் அமெரிக்காவிலிருந்து வருகிறார். ராதாராவிக்கு எதிராக களத்தில் இறங்கி தேர்தலில் வெற்றி பெறுகிறார். இந்தக்காட்சிகள் எல்லாம் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் வரலட்சுமி சம்மந்தப்பட்ட காட்சிகள் பாக்கி இருந்தது. அதை கடைசிநாளில் படமாக்கியுள்ளனர்.