துப்பாக்கி, கத்தி படங்களைத்தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தின் வசன காட்சிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தில் விஜய்யின் ஓப்பனிங் பாடலை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 நாட்களாக படமாக்கி வந்தனர். அந்த பாட லுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்தார்.
இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்ததுமே யூனிட்டார் அனைவரும் போட்டோ ஒன்று வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அந்த பாடலை யாரோ மர்ம நபர்கள் மொபைல் போனில் படம் பிடித்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் நடன குழுவினருடன் ஆடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் சர்கார் படக்குழு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.