புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய செல்வராகவன்
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் கவனிக்கக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய சில படங்களின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என ரசிகர்களே ஆசைப்படுகிறார்கள்.
அப்படி மக்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.
இப்பட இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என அண்மையில் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில் செல்வராகவன் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

Leave A Comment
You must be logged in to post a comment.