‘மாஸ்டர்’ ஸ்டைலில் ‘ஷ்….’ புகைப்படம்: சீரியல் நடிகை கலக்கல்
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் இந்த திரைப்படம் சுமார் 300 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே
மேலும் 6 மாதங்களுக்கும் மேல் திரையரங்கங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் தான் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு மீண்டும் அழைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்திற்குப் பின்னர் மீண்டும் திரையரங்குகள் காலியாக உள்ளன என்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாக உள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அந்த திரைப்படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து டிரெண்ட் ஆகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஷபானா தனது சமூக வலைதளத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் வெளியான ஒரு ஸ்டில் போலவே ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவரை சுற்றி உள்ள குழந்தைகள் அவரை போன்றே போஸ் கொடுத்திருப்பது போலவும் உள்ளன. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.