சிவகார்த்திகேயனுக்கும் தோனிக்கும் இடையே உள்ள அந்த விஷயம்.. பிரபல இயக்குநர் பாராட்டு..!
நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டி பிரபல இயக்குநர் பதிவிட்ட ட்வீட்டுக்கு, நடிகர் ரிப்ளை செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். பல்வேறு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தயாரிப்பாளராகவும், திறமையான இயக்குநர்களை அறிமுகப்படுத்திவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்தார். இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ”சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு, இளம் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் நீங்களும் தோனியை போலதான். உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து, இயக்குநர் சீனு ராமசாமியின் ட்வீட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ”உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி சார். இது என்னை இன்னும் உற்சாகப்படுத்துகிறது. நல்ல மனிதனாகவும், நல்ல நடிகனாகவும் என்னை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. நன்றி சார்.” என பதிவிட்டுள்ளார்.

Leave A Comment
You must be logged in to post a comment.